பெரியவர்களுக்கான நிதி கல்வி திட்டங்கள் (எப் இ பி ஏ)
வயது வந்தவர்களுக்கான நிதிக் கல்வித் திட்டம் (எப் இ பி ஏ) 2019 -இல் என் சி எஃப் ஈ ஆல் தொடங்கப்பட்டது. எப் இ பி ஏ என்பது விவசாயிகள், மகளிர் குழுக்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், நிறுவனப் பணியாளர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்கள் போன்ற வயது வந்தோரிடையே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் நிதி கல்வியறிவுத் திட்டமாகும். நிதிக் கல்விக்கான தேசிய உத்தி இலக்குகளின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது இந்த திட்டம் நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய உத்திகளின் இலக்குகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது மேலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்களில் (எஸ் எப் டி எஸ்) முக்கியமாக செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5,000 -க்கும் மேற்பட்ட எப் இ பி ஏ கூட்டங்கள் என் சி எஃப் ஈ ஆல் நடத்தப்படுகின்றன. “நிதி விழிப்புணர்வு மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியா” என்ற நமது தொலைநோக்கு பார்வைக்கு கணிசமான பங்களிப்பை இந்தத் திட்டம் எதிர்பார்க்கிறது.
fe_programs@ncfe.org.in +91- 022-68265115
எப் இ பி ஏ -இன் முக்கிய அம்சங்கள்
நோக்கம்
சமூகத்தில் நிதி ரீதியாக விலக்கப்பட்ட பிரிவினரிடையே நிதிச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை மிகவும் திறம்பட பயன்படுத்த நம்பிக்கையை ஏற்படுத்தும் நிதி விழிப்புணர்வை உருவாக்குதல், இதன் மூலம் முறையான நிதித் துறைக்கு அதிகமான மக்களை கொண்டு வருதல்.
இலக்கு குழு
பல்வேறு அமைப்புகளின் பணியாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள், மகளிர் குழுக்கள், குடும்பத்தினர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டைதாரர்கள், இராணுவ பணியாளர்கள் அல்லது சமூகத்தின் நிதி ரீதியாக விலக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் போன்ற வயது வந்தோர்.
இலவசம்
பயிற்சி பட்டறை இலவசமாக நடத்தப்படும் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படாது. என் சி எஃப் ஈ இலவசமாக பொருட்களை வழங்கும்.
பயிற்சியாளர்கள்
இந்தியா முழுவதும் எஃப் இ பி ஏ பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்காக என் சி எஃப் ஈ நிதிக் கல்வி பயிற்சியாளர்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது.
உள்ளடக்கம்
எஃப் இ பி ஏ -க்கான நிதிக் கல்விப் பொருளை என் சி எஃப் ஈ உருவாக்கியது, இது குறிப்பாக சமூகத்தின் வயது வந்தோரை இலக்காகக் கொண்டது. தலைப்புகள் பின்வருமாறு: வருமானம், செலவுகள் மற்றும் பட்ஜெட், சேமிப்பு, வங்கி, பற்று வரவு மேலாண்மை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், காப்பீடு, முதலீடு, ஓய்வூ மற்றும் ஓய்வூதியம், அரசாங்கத்தின் நிதி சேர்க்கை திட்டங்கள், மோசடி பாதுகாப்பு – போன்சி திட்டங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் குறை தீர்க்கும் செயல்முறை.